ஹவுஸ் மேட்ஸ் திரை விமர்சனம்

ஹவுஸ் மேட்ஸ் திரை விமர்சனம்

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாகவே நல்ல பேமிலி கண்டெண்ட் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது, அது ஹிட்டும் அடிக்கிறது, அந்த வகையில் ராஜவேல் இயக்கத்தில் பேமிலியுடன் கொஞ்சம் பேண்டஸி கலந்து இன்று வெளிவந்துள்ள ஹவுஸ் மேட்ஸ் எப்படியுள்ளது, பார்ப்போம்.

கதைக்களம்

தர்ஷன் தன் காதலியை அர்ஷாவை திருமணம் செய்து தருமாறு அவர் அப்பாவிடம் கேட்க, அவரும் வீடு வாங்கினால் கட்டி தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் கஷ்டப்பட்டு வேளச்சேரி-ல் ஒரு அப்பார்மெண்ட் வாங்குகிறார்.

12 வருட பழைய அப்பார்மெண்ட்-ல் இவர்கள் குடியேறியதும் அமானுஷியமாக பல விஷயங்கள் நடக்கிறது, வேறு யாரோ அந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறார்கள்.

அதே நேரத்தில் மறுபக்கம் காளி வெங்கட் வீட்டிலும் இதே மாதிரி ஒரு உணர்வை உணர, ஒரு கட்டத்தில் வீட்டில் இருப்பது யார் என்று ஒருவருக்கொருவர் சுவரில் எழுத, அங்கு தான் பெரிய டுவிஸ்ட் வருகிறது.

இவர்கள் இருவரும் இருப்பது ஒரே வீட்டில் தான், ஆனால், காளி வெங்கட் இருப்பது 2012, தர்ஷன் இருப்பது 2022, பிறகு இவர்களுக்குள் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
 

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து மக்களுக்கு எளிதாக புரியும் படி சொன்னதற்காகவே இயக்குனருக்கு பாராட்டுக்கள், அதற்கு என்ன வேண்டுமோ அதை நடிப்பால் தர்ஷன், அர்ஷா, வினோதினி, இதெல்லாம் விட காளி வெங்கட் தன் நடிப்பால் அசத்தியுள்ளனர்.

அதிலும் இரண்டு வீட்டாரும் சுவரில் பேசிக்கொள்ளும் காட்சி செம கலகலப்பு, அதோடு அந்த வீட்டில் ஒன்று செய்தால் இங்கும் நடக்கும், உதாரணத்திற்கு அங்கு பேன் போட்டால் இங்கு பேன் சுத்தும் போன்ற இடமெல்லாம் ரகளை செய்துள்ளனர்.

இந்த சீன்-யை வைத்து இரண்டாம் பாதியில் வீடு வாங்க வருபவர் வீட்டில் ஏதோ இருக்கிறது என்று பயந்து ஓடும் காட்சி சிரிப்பிற்கு பஞ்சமில்லை, முதல் பாதி முழுவதும் நாம் பேய் படத்திற்கு தான் வந்துவிட்டோம் என்ற உணர்வு வருகிறது.

ஆனால், ஒரு காரணத்திற்காக மின்னல் அடித்து இரண்டு கால கட்டமும் ஒரே டைம் லைனில் உருவாகுவது போல் காட்டியுள்ளனர், அதை சீனியர் என்ற ஒரு கதாபாத்திரம் வைத்து நமக்கு புரியும் படி சொல்லவும் முயற்சித்து உள்ளனர்.

ஆனால், சேர் நகர்வது குழாயில் தண்ணி வருவது போன்ற காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் இது பேய் படமா இல்லை சயின்ஸ் படமா என்ற குழப்பம் ஆடியன்ஸிடமே இருந்து வருகிறது.

அதோடு இப்படி ஒரு விஷயம் நடந்தாலே ஊர் உலகத்திற்கே இந்த டிஜிட்டல் யுகத்தில் தெரிந்து விடும், ஆனால் தர்ஷன் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்து இவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அதோடு கிளைமேக்ஸில் தான் காளி வெங்கட் உயிரோடு இருக்கிறாரா என்று தர்ஷன் தேடி செல்கிறார், இப்படி ஒன்று நடந்தால் நம்ம மைண்ட் அடுத்த நாளே யார் இதற்கு காரணம் என்று அவரை தேடி தான் செல்லும், இப்படியான சினிமாத்தனமான விஷயங்கள் ஆங்காங்கே கொஞ்சம் உள்ளது தான்.

ஆனால், இப்படி சில குறைகள் இருந்தாலும் கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சி சயின்ஸாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் எப்படியோ இது நடந்தது நல்லது என்ற உணர்வை நமக்கு கொடுக்கும்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அந்த வீட்டை ஏதோ தமிழ் படம் சிவா வீடு போல் வெளியே அழுக்காக இருந்தாலும் உள்ளே அத்தனை அழகாக படப்பிடித்து காட்டியுள்ளனர், இசை ராஜேஸ் முருகேசன் அட நம்ம ப்ரேமம் பட இசையமைப்பாளர் தாங்க, இதிலும் கலக்கியுள்ளார். 

க்ளாப்ஸ்

கதைக்களம் அதை சொன்ன விதம்

தர்ஷன், அர்ஷா, காளி வெங்கட், வினோதினி நடிப்பு

கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சி


பல்ப்ஸ்

ஆங்காங்க சில லாஜிக் ஓட்டைகள், இதை சயின்ஸ் படம் என்பதா இல்லை பேய் படம் என்று நினைப்பாதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

மொத்ததில் இந்த ஹவுஸ் மேட்ஸ் எல்லோருக்கும் பிடித்த ஹவுஸ் மேட்ஸ் ஆகவே வந்து செல்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *