ஸ்ரீதேவி பிறந்தநாள்.. 35 வருடங்களுக்கு முன்பு கணவர் போனிகபூர் செய்த சுவாரஸ்யமான செயல்

ஸ்ரீதேவி
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.
சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
சுவாரஸ்யமான செயல்
இந்நிலையில், நேற்று ஸ்ரீதேவி பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய கணவர் ஸ்ரீதேவி புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ” 1990ஆம் ஆண்டு ஸ்ரீதேவியின் பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. அவருக்கு அது 27ஆவது பிறந்தநாள். ஆனால், நான் அவரிடம் 26ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினேன்.
அதற்கு முக்கிய காரணம் அவர் வருடம் வருடம் இளமையாகிறார் என்பதை உணர்த்துவதற்கே ஒரு வயதை குறைத்து 26ஆவது பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். ஆனால் அவர் நான் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.