ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

கேம் சேஞ்சர்
இயக்குனர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் கூட்டணியில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற 10ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர் தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதில் படம் சிறப்பாக வந்துள்ளது என்றும், இயக்குனர் ஷங்கரின் கம் பேக் என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் நடிகர் ராம் சரணின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் பண்டிகை காலத்தில் பார்க்க வேண்டிய தரமான திரைப்படம் கேம் சேஞ்சர் என கூறியுள்ளார். இவருடைய இந்த விமர்சனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் கேம் சேஞ்சர் படத்திற்கு கிடைக்கப்போகும் வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்று.