‘வேட்டையன்’ ஒரு வருடம் நிறைவு.. ரஜினியை இயக்கியது பற்றி இயக்குநர் ஞானவேல் உருக்கமான பதிவு

‘வேட்டையன்’ ஒரு வருடம் நிறைவு.. ரஜினியை இயக்கியது பற்றி இயக்குநர் ஞானவேல் உருக்கமான பதிவு

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் வேட்டையன். கடந்த வருடம் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினி இந்த படத்தில் நடித்து இருப்பார். ஒரு டீச்சர் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட, அதை செய்த நபர் ஒருவரை போலீசார் கைகாட்ட ரஜினி அவரை என்கவுண்டர் செய்துவிடுவார். ஆனால் அதன் பின் அந்த குற்றத்தை செய்தது அவன் இல்லை என தெரியவர ரஜினி குற்ற உணர்ச்சியில் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.

ஞானவேல் பதிவு

இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் உடன் பணியாற்றியது தனது கனவு நிஜமான தருணம் என அவர் கூறி இருக்கிறார்.

“இயக்குனராக என் பயணத்தில் இது ஒரு மைல்கல் படம். பலர் உச்சத்திற்கு சென்ற எடுத்துக்காட்டுகள் இருக்கலாம், ஆனால் உச்சத்திற்கு சென்ற பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் தான் benchmark” என ரஜினியை அவர் பாராட்டி இருக்கிறார்.

பஹத் பாசில் உடன் பணியாற்றியது fulfilling artistic experience என ஞானவேல் குறிப்பிட்டு இருக்கிறார். 

அனிருத்துக்கு நன்றி

அனைவருக்கும் நன்றி

தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொன்ன ஞானவேல்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *