வில்லன் விருதை தட்டி தூக்கிய கமல்.. முழு லிஸ்ட் இதோ

SIIMA Awards 2025
கடந்த சில நாட்களுக்கு முன் சைமா விருது விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய சினிமாவில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் சினிமாவில் இருந்து விருதுகளை வென்றவர்களின் லிஸ்ட் ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது தெலுங்கில் யார்யார், என்னென்ன விருதுகளை வென்றுள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இதில் புஷ்பா 2 மற்றும் கல்கி ஆகிய படங்களுக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது. அதிலும் கமல் ஹாசன் கல்கி திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த சுப்ரீம் யாஷ்கின் கதாபாத்திரத்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வென்றவர்களின் பட்டியல்:
-
சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஷ்பா 2) -
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (புஷ்பா 2) -
சிறந்த இயக்குநர் – சுகுமார் (புஷ்பா 2) -
சிறந்த திரைப்படம் – கல்கி
சிறந்த வில்லன் – கமல் ஹாசன் (கல்கி) -
சிறந்த துணை நடிகர் – அமிதாப் பச்சன் (கல்கி) -
சிறந்த துணை நடிகை – அன்னா பென் (கல்கி) -
சிறந்த நகைச்சுவை நடிகர் – சத்யா (மது வடலரா 2)
-
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரத்னவேலு (தேவரா) -
சிறந்த இசையமைப்பாளர் – தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா 2) -
சிறந்த பாடலாசிரியர் – ராமஜோகய்யா (சுட்டமல்லே ‘தேவரா’ படம்) -
சிறந்த பின்னணி பாடகர் – கண்டுகூரி ஷங்கர் பாபு (பீலிங்ஸ் ‘புஷ்பா 2’) -
சிறந்த பின்னணி பாடகி – ஷில்பா ராவ் (சுட்டமல்லே ‘தேவரா’ படம்) -
சிறந்த நடிகர் (Critics) – தேஜா (ஹனுமான்)