விடாமுயற்சி படத்தின் இலங்கை வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

விடாமுயற்சி படத்தின் இலங்கை வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

விடாமுயற்சி 

மூன்று நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் இலங்கை வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி கடந்த 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

விடாமுயற்சி படத்தின் இலங்கை வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Movie Srilanka 3 Days Box Office

பலருக்கும் இப்படம் ஒர்கவுட் ஆகியிருந்தாலும், மறுபக்கம் சிலர் கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவிலும் சரி, தமிழகத்திலும் சரி நல்ல வரவேற்பை வசூல் ரீதியாக பெற்று வரும் விடாமுயற்சி படம் இலங்கையில் 3 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வசூல்

அதன்படி, அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான இப்படம் 3 நாட்களில் இலங்கையில் 4.5 கோடி வசூல் செய்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் இலங்கை வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Movie Srilanka 3 Days Box Office

இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி ஆகும். இது இப்படத்திற்கு இலங்கையில் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வார இறுதியின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *