விஜய் டிவியின் தனம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சத்யா… அவருக்கு பதில் இவர்தான், போட்டோ இதோ

தனம் சீரியல்
விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி இப்போது சீரியல்கள் மூலமாகவும் கெத்து காட்டி வருகிறார்கள்.
இந்த வருடம் தொடங்கப்பட்ட அய்யனார் துணை ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரை தாண்டி இம்மாதமே தொடங்கப்பட்ட சீரியல் என்றால் அது தனம்.
கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டமாக தொடர் உள்ளது.
மாற்றம்
இதில் நடிகர் ஸ்ரீ நாயகனாக நடித்த நிலையில் அவரது கதாபாத்திரம் முடிக்கப்பட்டது.
பின் சீரியலில் நடிகர் சத்யா என்ட்ரி கொடுத்தார், அவரது குடும்பத்தை வைத்து கதை நகர்ந்து வந்தது.
தற்போது சத்யா தனம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளாராம்.
அவருக்கு பதில் இனி கதிரேசனாக நடிகர் க்ரிஷ் நடிக்க உள்ளார்.