விஜய் ஒரு சுயநலவாதி.. நடிகர் சத்யராஜின் மகள் தாக்கு

நேற்று நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகி உள்ளனர்.
அந்த சம்பவத்திற்கு யார் காரணம், யார் பொறுப்பு என்பது தான் தற்போது விவாதமாக மாறி இருக்கிறது. விஜய்யை ஒரு தரப்பு விமர்சித்து வரும் நிலையில், போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுக்காதது தான் இதற்கு காரணம் என மற்றொரு தரப்பு குற்றம்சாட்டுகிறது.
சத்யராஜ் மகள்
இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நடிகர் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.
“உண்மையான அரசியல்வாதிக்கும் சுயநலவாதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. விஜய் ஒரு சுயநலவாதி” என திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார்.
திவ்ய தற்போது திமுக-வில் ஒரு பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.