வரும் திங்கள் முதல் ஜீ தமிழின் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர்?

ஜீ தமிழ்
சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் அதிகம் டிஆர்பி சண்டையில் உள்ளது.
இவர்களுக்கு இடையில் குறுகிய கால கட்டத்தில் அசுர வளர்ச்சி கண்டது தான் ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி மக்கள் மத்தியில் முதலில் பிரபலமானதற்கு காரணம் செம்பருத்தி என்ற சீரியல் தான்.
இல்லத்தரசிகள் அதிகம் கொண்டாடிய இந்த தொடர் தமிழகத்திலேயே நம்பர் 1 இடத்தை எல்லாம் ஒரு காலத்தில் பிடித்தது.
நேரம் மாற்றம்
ஜீ தமிழில் கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், அண்ணா, அயலி, கெட்டி மேளம் போன்ற தொடர்கள் டிஆர்பியில் கலக்கும் டாப் தொடர்களாக உள்ளது.
தற்போது செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் வரும் திங்கள் முதல் மாற இருப்பதாக தகவல் வந்துள்ளது.
ஒன்று சிவா சேகர் இயக்கத்தில் வைஷ்ணவி, அருண், சிபு சூர்யன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வீரா தொடர். இந்த சீரியல் வருகிற ஜுலை 7ம் தேதி முதல் இரவு 7.15 மணி முதல் இரவு 8 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
இரண்டாவது கெட்டி மேளம் சீரியல். சமீபத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ஜுலை 7ம் தேதி முதல் 6.30 மணி முதல் 7.15 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.