வரலட்சுமி நோன்பில் கலந்துகொண்டு மனைவிக்கு பக்தியாக குங்குமம் வைத்து ஆசீர்வதித்த அஜித்.. வீடியோ இதோ

நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் பல விஷயங்களில் முன்னோடியாக இருப்பவர். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தங்களது கனவை நோக்கிய பயணத்தை எப்போதும் விடக்கூடாது என்பதை காட்டுபவர்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமையல், தோட்டம் அமைப்பது, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல், பைக் சுற்றுலா இப்போது கார் ரேஸ் என ஆக்டீவாக ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை நிரூபித்த வண்ணம் உள்ளார்.
வீடியோ
கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை எப்போதும் தவிர்த்தது இல்லை என நன்றாக தெரிகிறது.
ஆகஸ்ட் 8, தமிழகத்தில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டது. அஜித்தும் தனது மனைவியுடன் இந்த விசேஷத்தில் கலந்துகொண்டு தனது மனைவிக்கு பக்தியாக குங்குமம் வைத்து ஆசீர்வதிக்கிறார்.
அந்த வீடியோவை ஷாலினியே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார், இதோ,