லோகேஷின் பென்ஸ் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.. முன்னணி நடிகர் கொடுத்த விளக்கம்

லோகேஷின் பென்ஸ் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.. முன்னணி நடிகர் கொடுத்த விளக்கம்


லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பில் அடுத்ததாக பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.


பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷின் பென்ஸ் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.. முன்னணி நடிகர் கொடுத்த விளக்கம் | Madhavan Is Not Going To Act In Lokesh Film

தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் லோகேஷின் எல்சியூ திரைப்படமாக பென்ஸ் அமையும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பென்ஸ் படத்தில் மாதவன் நடிக்கவில்லை என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

லோகேஷின் பென்ஸ் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.. முன்னணி நடிகர் கொடுத்த விளக்கம் | Madhavan Is Not Going To Act In Lokesh Film

மாதவன் விளக்கம் 

அதில், ” இந்த படத்தில் நான் நடிக்கவுள்ளதாக பரவும் செய்திகள் எனக்கு புதிதாக உள்ளது, படத்தில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். ஆனால் இது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது” என்று பதிவிட்டுள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *