லப்பர் பந்து பட நடிகர் போக்ஸோ வழக்கில் கைது.. சிறுவன் புகாரால் போலீஸ் நடவடிக்கை

லப்பர் பந்து பட நடிகர் போக்ஸோ வழக்கில் கைது.. சிறுவன் புகாரால் போலீஸ் நடவடிக்கை

லப்பர் பந்து பட நடிகர் தற்போது கைதாக இருப்பதாக வந்திருக்கும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பூங்காவுக்கு வரும் சிறுவர்களை குறி வைத்து ‘நீ அழகாய் இருக்கிறாய், என்னை போல் பாப்புலர் ஆகலாம்’ என பேசி அதன் பிறகு அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஹரி என்ற நபர் தான் தற்போது கைதாகி இருக்கிறார்.

அவர் லப்பர் பந்து படத்தில் நடித்தவர் என்றும் சில சீரியல்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறாராம்.

லப்பர் பந்து பட நடிகர் போக்ஸோ வழக்கில் கைது.. சிறுவன் புகாரால் போலீஸ் நடவடிக்கை | Lubber Pandhu Actor Arrested In Pocso

கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனை அணுகி அவனிடம் பேசி தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அதைப்பற்றி அவன் பெற்றோரிடம் கூற அவர்கள் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.

தற்போது நடிகர் ஹரியை கைது செய்து அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

ஹரி ஏற்கனவே சில சின்னத்திரை நடிகைகள் இருக்கிறார் என்றும், அது மட்டுமின்றி வெளியில் பல சிறுவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *