ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

விஜயா, தனது மகன் மனோஜிற்கு ரோஹினியிடம் இருந்து விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என இருக்கிறார்.

ஆனால் ரோஹினி, இந்த ஜென்மத்தில் எனது கணவர் என்றால் அது மனோஜ் தான் என உறுதியாக உள்ளார்.

ரோஹினியிடம் இருந்து தப்பிக்க கோர்ட்டில் ஒரு முக்கிய ஆதாரமாக காட்ட தனது நண்பனுடன் ரோஹினிக்கு தொடர்பு உள்ளது என காட்ட ஒரு வீடியோ எடுத்தார். முதலில் என்ன இது என குழம்பிய ரோஹினி பின் இது மனோஜ் பிளான் என்பதை தெரிந்துகொள்கிறார்.

எபிசோட் 

சாப்பாடு
மீனா சமைத்துக்கொடுத்த சாப்பாட்டை மனோஜ்-விஜயா வேண்டாம் என்று அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். அந்த உணவு நன்றாக இல்லாமல் போக மனோஜ் விஜயாவிடம் கெஞ்சி பின் மீனா சமைத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார்.

ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial March 10 Episode

அப்போது மனோஜிற்கு சந்தோஷிடம் இருந்து ஒரு போன் வருகிறது, என்னை வந்து காப்பாற்று என்கிறார். அப்போது மனோஜ், ரோஹிணியை சிக்க வைக்க சந்தோஷ வைத்து லவ் டிராமா போட்டோம் இப்போது ஏதோ பிரச்சனை ஆகியிருக்கிறது என கூற அண்ணாமலை இப்படியெல்லாம் செய்யலாமா என திட்டுகிறார்.

சந்தோஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் மற்றும் முத்து செல்கிறார்கள். அங்கு போனால் ஒருவர் ரோஹினி சொல்லி சந்தோஷை அடிப்பதாக கூற எப்படியோ அவரை முத்து காப்பாற்றுகிறார்.

ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial March 10 Episode

கடைசியாக ரெஸ்டாரண்ட்டில் மீனா, ஸ்ருதி, ரவி இருக்க முத்து வந்து விஷயத்தை கூறுகிறார். முத்து விஷயத்தை சொன்னதும் ஸ்ருதி, இதேபோல் நீத்துவை நாலு அடி அடிச்சா அவளும் திருந்திடுவா என கூற ரவி ஷாக் ஆகிறார்.

வீட்டில் குழம்பி போய் மனோஜ் உட்கார்ந்திருக்கும் விஜயா அவருக்கு ஜுஸ் கொடுக்கிறார். அதைப்பார்த்து மனோஜை அண்ணாமலை திட்ட வழக்கம் போல் விஜயா அவர் சொல்வதை விடு என்கிறார்.

ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial March 10 Episode

உனக்கு பெண் பார்த்துள்ளேன் என விஜயா கூற மனோஜ் சந்தோஷம் அடைகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *