ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய அவரது மனைவி பிரியங்கா.. கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் டிவியில் பதிலடி

ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய அவரது மனைவி பிரியங்கா.. கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் டிவியில் பதிலடி

ரோபோ ஷங்கர்

கடந்த 18ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ ஷங்கர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு பெரும் துயரத்தை தந்தது.

ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய அவரது மனைவி பிரியங்கா.. கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் டிவியில் பதிலடி | Priyanka Robo Shankar Dance Controversy

திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

ரோபோ ஷங்கரின் நினைவாக ‘என்றும் நம் நினைவில் ரோபோ ஷங்கர்’ என விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

சர்ச்சையான பிரியங்காவின் நடனம்

இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான நிலையில், இதில் ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா ரோபோ ஷங்கர் நடனமாடியது விமர்சிக்கப்பட்டது. பலரும் இதை கிண்டல் செய்தனர். இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பரான நடிகர் போஸ் கண்கலங்கி பேசியுள்ளார்.

ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய அவரது மனைவி பிரியங்கா.. கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் டிவியில் பதிலடி | Priyanka Robo Shankar Dance Controversy

அவர் பேசியதாவது: “இப்போ கூட சமீபத்தில் ஒரு விமர்சனம் வந்தது, அவங்க நடனமாடினார் என்று. நாங்க நடனமாடாத நாளே இல்லை. நான் நடனமாட மாட்டேன். ஆனால், ரோபோ என் பக்கத்தில் வந்து, ஆடு ஆடு என கூறி எப்படியாவது என்னை ஆட வைத்துவிடுவான். இந்திரஜா ஒரு ஸ்டேப் போடுவா நான் ஒரு ஸ்டேப் போடுவேன், பிரியா ஒரு ஸ்டேப் போடுவா, அது எங்களுக்கு சாப்பிடு மாதிரி. என் வாழ்வியலோடு கலந்தது அந்த ஆட்டம். அந்த ஆட்டத்தின் அர்த்தம் வேறு யாருக்கும் புரியாது. நெருக்கமாக இருக்கிறார் எங்களுக்குத்தான் புரியும். அது ஒரு உணர்வு. அது நாங்க பேசிக்கிறோம். ஆட்டத்தின் மூலமாக பேசிக்கிறோம். யாரும் அதை கிண்டல் செய்யாதீர்கள். அது ஒரு மொழி. அது அவங்க மொழியில் பேசிக்கிறாங்க” என கண்கலங்கி மிகவும் உணர்வு பூர்வமாக பேசினார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *