ரூ.50 கோடிக்கு காசி செட் போட்ட ராஜமௌலி.. அச்சு அசலாக அப்படியே இருக்கே! வைரல் போட்டொ

இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் பெயர்பெற்றவர். பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அவரது பிரம்மாண்ட படங்கள் மிகப்பெரிய வசூலையும் குவித்து சாதனை படைத்தன.
அடுத்து அவர் மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். SSMB29 என தற்காலிகமாக அந்த படம் அழைக்கப்படுகிறது.
காசி செட்
இந்த படத்திற்காக ராஜமௌளி தற்போது வாரணாசி – காசி கோவில் செட் உருவாக்கி இருக்கிறார். வாரணாசியில் ஷூட்டிங் செய்வது கடினம் என்பதால் அந்த கோவிலின் செட்டை அப்படியே ஹைதராபாத்தில் உருவாக்கி இருக்கின்றனர்.
இதற்காக 50 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார் ராஜமௌலி. இந்த செட்டின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.