யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம் எது தெரியுமா.. அரவிந்தன் இல்லை.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம் எது தெரியுமா.. அரவிந்தன் இல்லை.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்

யுவன் 

தனது இசையால் பல கோடி மனதில் இடம்பிடித்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கொம்புசீவி.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம் எது தெரியுமா.. அரவிந்தன் இல்லை.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல் | Yuvan Shankar Raja Talk About Captain Vijayakanth

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனில் கலந்துகொண்ட யுவன், தனது முதல் படம் அரவிந்தன் இல்லை கேப்டன் நடித்த படம்தான் என கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது,

“கேப்டன் திரைப்படங்களை பார்த்துதான் எனக்கு கரியரை தொடங்கினேன். கேப்டனுடன் எனது முதல் படம் தென்னவன். ஆனால், அதற்கு முன்பே அலெக்ஸாண்டர் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்கு எனது அண்ணன் கார்த்திக் ராஜாதான் இசையமைத்து வந்தார். ஆனால், திடீரென அவர் மும்பை கிளம்பி சென்றதால், இப்படத்திற்கான ரீ ரெக்கார்டிங் பணிகளை தான் செய்தேன். அதுதான் எனது முதல் படம்” என கூறியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம் எது தெரியுமா.. அரவிந்தன் இல்லை.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல் | Yuvan Shankar Raja Talk About Captain Vijayakanth

மேலும் பேசிய அவர், “நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது கேப்டன் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்காக நான் நடனமாடி காட்டியிருக்கிறேன். இயக்குநர் பொன்ராம் எப்போது இந்த படம் கூறி ஹீரோ ஷண்முக பாண்டியன் என சொன்னாரோ, படத்தின் கதையை நான் கேட்கவில்லை, உடனடியாக நான் இசையமைக்கிறேன் என கூறிவிட்டேன். ஏனென்றால் அவருக்கு என் குடும்பத்தில் ஒருவர். நான் பொதுவாக மேடைகளில் அதிகமாக பேசமாட்டேன். ஆனால், இப்போது பேசுகிறேன் என்றால் அது கேப்டனுக்காகதான்” என கூறினார்.  

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம் எது தெரியுமா.. அரவிந்தன் இல்லை.. அவரே கூறிய சுவாரஸ்ய தகவல் | Yuvan Shankar Raja Talk About Captain Vijayakanth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *