மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை விட சிறு பட்ஜெட் படங்கள் தான் கவனம் பெற்று ரசிகர்கள் மனதை கவர்கிறது, அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி நடிப்பில் மெட்ராஸ் மேட்னி எப்படியுள்ளது? பார்ப்போம்.

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review

கதைக்களம்


சத்யராஜ் ஒரு எழுத்தாளர், அவர் எப்போதும் எலேட் லெவலிலேயே யோசிக்க, ஒரு பெண் மூலம் சாதரண மக்கள் பற்றி எழுதுங்கள் அதுதான் பெரிய ரீச் கிடைக்கும் என ஒரு அறிவுரை வருகிறது. அதை ஏற்று உடனே ஒரு பாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவர் கதையை கேட்கிறார்.


காளி வெங்கட் ஒரு ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கு சிறு வருமனத்தை வைத்து தன் மகன், மகளை எப்படியாவது பெரிய ஆட்கள் ஆக வேண்டும் என்று போராடுகிறார்.

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review


இதில் மகள் ரோஷினி ஒரு நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாயாது நம் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என காளி வெங்கட் நினைக்கிறார்.


அதே நேரத்தில் மகன் Engineering படிக்க வைக்கவும் பணம் வேண்டும் என ஒரு போராட்டமும் தொடங்க, இதெல்லாம் அவரை எங்கு கொண்டு சென்றது, ஏன் குடிக்கவே குடிக்காத காளி வெங்கட் பார் வரை வந்தார் என்ற உணர்வுப்பூர்வமான கதையோட்டமே இந்த மெட்ராஸ் மேட்னி. 

படத்தை பற்றிய அலசல்


காளி வெங்கட் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷன், ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்பு வாழ்ந்து காட்டியுள்ளார், ஒரு அப்பாவாக தன் பிள்ளைக்களுக்கு இரவு-பகல் பாராமல் உழைத்தும், ஒரு கட்டத்தில் பாசமான அப்பாவாக இருந்தால் மட்டும் போதாது, பொறுப்பான அப்பாவாக இருக்கனும் என்று உடைந்து பேசுமிடம் எல்லாம் தன் நடிப்பால் எல்லோரையும் கலங்க வைக்கின்றார்.

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review

ஒரு மிடில் க்ளாஸில் என்ன அட்வெஞ்சர் இருக்க போகிறது என்று சத்யராஜ் கதை கேட்க ஆரம்பிக்க, காளியின் மகன் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல காலேஜ் போகவேண்டும் என்று இருக்க, அப்பா ஒரு கோழை என்று நினைத்துக்கொண்டு இருக்க, ஆனால் தன்னை ஒரு ஆளாக்க குப்பை வரைக்கு அள்ளியுள்ளார் என தன் அப்பாவால் மோசமான நிலைக்கு சென்ற ஒருவன் சொல்லி தெரிய வரும் இடத்தில் அப்பாவை நினைத்தது பெருமிதம் கொள்வது என படம் முழுவதும் நிறைய எமோஷ்னல் டச்.


அதோடு மகளாக ரோஷினி ஜாதி, கலர் என இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறது, அவள் படித்து பெரிய இடத்தில் வேலை செய்தாலும், பெண் பார்க்கும் போது அவள் படும் கஷ்டம், அதையும் தாண்டி தன் மேனஜேர் அர்ச்சனாமூலம் இந்த கல்யாணம் எல்லாம் தேவையா என்று நினைக்குமிடல்லாம், இந்த கால பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு தான்.

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review


வாழ்நாளில் சமயக்கட்டை மட்டுமே பார்த்து வந்த காளி வெங்கட் மனைவி கூட ,படிக்காத நான் அட்வைஸ் சொல்றேன், உனக்கு புடிக்காத ஆணிடம் வாழாதே என்று சொல்லுமிடம் சபாஷ்.


இதை தாண்டி ஊறுகாய் விற்பவர், சேட்டு, ட்ரைவிங் சொல்லி கொடுக்கும் மரிஜம் ஜார்ஜ், பச்சவந்தி ப்ரேமா, ராமர், EB-ல் வேலைப்பார்க்கும் பூமர் அங்கிள் என அனைவருமே அவர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். டெக்னிக்கலாகவும் இசை, ஒளிப்பதிவும் அருமை.


இத்தனை ப்ளஸ் குவிந்து இருந்தாலும் இந்த படம் பல இடங்களில் ஒரு டாக்குமெண்ட்ரி பாணியிலேயே செல்வது அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படமா என்ற கேள்விகுறியும் வருகிறது. 

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review

க்ளாப்ஸ்


காளி வெங்கட் அசுர நடிப்பு, மற்ற நடிகர், நடிகைகள் பங்களிப்பு.


படத்தின் எமோஷ்னல் காட்சிகள் மற்றும் வசனங்கள்.


பல்ப்ஸ்


டாக்குமெண்ட்ரி பாணியில் செல்லும் திரைக்கதை.



மொத்தத்தில் கமர்ஷியல் ரசிகர்களுக்கு எப்படியோ, கண்டெண்ட் விரும்பும் சினிமா விரும்பிகள் கண்டிப்பாக விசிட் அடிக்கலாம். 

மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் | Madras Matinee Movie Review

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *