மூன்று நாளில் Dude மொத்த வசூல்.. தீபாவளி வின்னரா? தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது Dude படம்.
தீபாவளி ஸ்பெஷலாக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
3 நாள் வசூல்
Dude படம் உலகம் முழுக்க 3 நாட்களில் மொத்தம் 66 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தீபாவளி வின்னர் என இந்த படத்தை அவர்களே அறிவித்து இருக்கின்றனர்.
மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாள் என்பதால் தொடர்ந்து நல்ல வசூலை இந்த படம் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.