முன் பதிவில் இதுவரை கூலி படம் செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

கூலி
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கூலி திரைப்படம் வருகிற 14ம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன் பதிவு வசூல்
2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கூலி உள்ளது. இதனால் முன் பதிவிலேயே இப்படத்தின் வசூல் மாபெரும் உச்சத்தை தொட்டு வருகிறது.
ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இதுவரை நடந்த முன் பதிவில் இப்படம் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ளது. கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ரூ. 100 கோடியை தொட்டுவிடும் என கூறுகின்றனர்.