முன்பே கணித்த விஜய்.. ஜனநாயகன் பிரச்சனை பற்றி சொன்ன விஷயம்

முன்பே கணித்த விஜய்.. ஜனநாயகன் பிரச்சனை பற்றி சொன்ன விஷயம்

ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் மீது புகார் வந்ததால் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என மத்திய அரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அது என்ன புகார், கொடுத்தது யார் என்கிற விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது.

மேலும் ரிலீஸ் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் தர வேண்டும் என வழக்கு தொடர முடியாது என்றும், படத்தில் பாதுகாப்பு படைகளின் குறியீடுகள் பயன்படுத்தியதால் அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு வாதிட்டது.

ஜனநாயகன் தயாரிப்பாளரின் வழக்கு தீர்ப்பு ஜனவரி 9ம் தேதி தான் வரும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதால், படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

முன்பே கணித்த விஜய்.. ஜனநாயகன் பிரச்சனை பற்றி சொன்ன விஷயம் | Vijay Predicted Jana Nayagan Issue In Advance

முன்பே கணித்த விஜய்


ஜன நாயகன் படத்திற்கு பிரச்சனை வரும் என விஜய் இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்துவிட்டாராம். அவர் அது பற்றி இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.

“சும்மாவே என் படத்திற்கு பிரச்சனை வரும். இப்போது வேறு ட்ராக்கில் வேறு செல்கிறேன். சொல்லவா வேண்டும். அதனால் உங்களுக்கு படம் தயாரிப்பதில் சம்மதமா என தான் தயாரிப்பாளர் KVNயிடம் கேட்டேன்” என விஜய் கூறி இருந்தார். 

முன்பே கணித்த விஜய்.. ஜனநாயகன் பிரச்சனை பற்றி சொன்ன விஷயம் | Vijay Predicted Jana Nayagan Issue In Advance

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *