மிகப்பெரிய தொகைக்கு ஜனநாயகன் படத்தை கைப்பற்றிய நிறுவனம்! லேட்டஸ்ட் தகவல்

விஜய்யின் ஜனநாயகன் படம் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்து இருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் இதுதான் என அறிவிக்கப்பட்டிருப்பதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.
படத்தில் மாஸ் கதையுடன் அரசியல் கருத்துக்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026 ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் படம் திரைக்கு வர இருக்கிறது.
கைப்பற்றிய நிறுவனம்
இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மிகப்பெரிய தொகைக்கு அவர்கள் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.