மார்கன் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மார்கன்
தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் 1 மற்றும் 2 என பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு இவர் தந்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மார்கன். அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வசூல் விவரம்
க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள மார்கன் திரைப்படம் இதுவரை நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.
இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மார்கன் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளது.