மாபெரும் வெற்றியடைந்துள்ள தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டைய கிளப்பியது. தலைவன் தலைவி படம் 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 94 கோடி ஆகும். விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் ரூ. 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் தலைவன் தலைவி சாதனை படைக்கிறதா என்று.