மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், சீதா-அருண் காதல் பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், மீனா தனது அம்மாவிடம் முத்துவை பற்றி பிறகு யோசி முதலில் சீதாவை பற்றி நினைத்துப்பார், அவள் விருப்பம் தான் முக்கியம் என பேசுகிறார்.
பின் ரோஹினி-மனோஜ்-விஜயா கலாட்டாக நடக்கிறது.
அடுத்து வீட்டில் முத்து, சீதா குறித்தும் அவரது காதலர் குறித்தும் தனது அப்பாவிடம் கூறி நியாயம் கேட்கிறார்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் முத்து. ஒரு பெண் காதல் தோல்வியால் தவறு செய்துகொண்ட சம்பவம் காட்டப்படுகிறது.
அந்த பெண்ணின் அம்மா கதறி அழுவதை கண்டு முத்து மற்றும் மீனா பதறுகிறார்கள். இதோ நாளைய எபிசோடின் புரொமோ,