மகேஷ் கொடுத்த பதவி உயர்வு.. ஆனால் போன் காலில் காத்திருந்த பெரிய ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் மகேஷ் கம்பெனியில் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
அன்புவுக்கு ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக பதவி உயர்வு, ஆனந்தி தான் இனிமேல் சூப்பர்வைசர் என மகேஷ் அறிவிக்கிறார். அதனால் அவர்கள் மகிழ்ச்சி ஆகி கொண்டாடுகிறார்கள்.
போன் காலில் அதிர்ச்சி
அதன் பிறகு ஆனந்திக்கு போன் காலில் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு நபர் போன் செய்து, ஆனந்தி கார்பத்திற்கு யார் காரணம் என்ன நடந்தது எல்லாமே தனக்கு தெரியும் என சொல்கிறான்.
அவன் பேச்சை கேட்டு ஆனந்தி அவனை சந்திக்க தனியாக போகிறார். மறுபுறம் அன்பு ஆனந்தியை தேடி அலைகிறார்.
ஆனந்தி கடத்தப்படுவாரா? ப்ரோமோவை பாருங்க.






