மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள்

சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாநதி சீரியலில் கோமதி பிரியா
இந்த நிலையில், தற்போது மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல் மகாநதி. இந்த சீரியலை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள்.
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் மகாநதி சீரியலில்தான் கோமதி பிரியா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியல் போலவே இந்த சீரியலும் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தரும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.