போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட்

போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை ரசிகர்கள் அதிகம் பார்க்கிறார்களோ இல்லையோ இப்போது சீரியல் தான் அதிக எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. 

சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த 2 சீரியல்களின் கதைக்களம் மிகவும் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் பொய் பொய்யாக சொல்லி மாட்டிக்கொண்டு மீண்டும் சரவணனுடன் சேர அதற்கும் தனது அம்மா பேச்சு கேட்டு பொய் சொல்லி வருகிறார்.

போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் | Pandian Stores 2 Serial Jan 14 Episode Storyline

எபிசோட்

இன்றைய எபிசோடில், மயில் அம்மா நாங்கள் போட்ட 80 சவரன் நகைகள் போலியாக்கிவிட்டார்கள் என கத்தி புலம்ப மீனா அதிரடியாக களத்தில் இறங்கி மொத்த உண்மையையும் கூறுகிறார்.

ஆனால் மயில் அம்மா விடாப்பிடியாக பொய்யை கூறிக்கொண்டு இருக்கிறார். இதனால் போலீஸ் அதிகாரி மயிலை வரவைக்க கூறுகிறார்.

மீனாவும், ராஜிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூற அவரும் போலீஸ் நிலையம் வருகிறார்.

போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் | Pandian Stores 2 Serial Jan 14 Episode Storyline

மயில் வந்தவுடன் போலீஸ் அதிகாரி 80 சவரன் தங்க நகையுடன் தான் திருமணம் செய்தீர்களா என கேட்க அவர் தனது அம்மா பேச்சைக்கேட்டு ஆமாம் என்கிறார். இதனால் கோபப்பட்ட கோமதி கோபத்தில் மயிலை அடிக்க வருகிறார்.

ஆனால் மீனா மற்றும் ராஜி, மயிலிடம் சரவணன் மாமா மீது உண்மையான அன்பு இருந்தால் நிஜத்தை கூறுங்கள் என சொல்ல மயில் கதறி கதறி அழுகிறார். ஆனால் அவர் என்ன சொல்லப்போகிறார் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *