பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பயங்கரமான கதைக்களத்துடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
திருச்செல்வம் அவர்கள் இந்த சீரியல் பெண்கள் முன்னேற்றத்திற்கான கதை என்கிறார், ஆனால் அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை. ஜனனியை அழிக்க கொடைக்கானலில் பிளான் போட்டுள்ளார் தேவசகாயம்.
ஆனால் அவரது பிளானில் இருந்து ஜனனி தப்பிப்பது போல் காட்டப்படுகிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை. இன்னொரு பக்கம் ஜனனிக்கு எதிராக குணசேகரன் ஏதோ பிளான் போட்டுக்கொண்டு இருக்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், வீட்டில் அனைவரும் இருக்க பூஜை நடக்கிறது. கேரளாவில் இருந்த வந்தவர் பயங்கர பூஜை செய்கிறார், அறிவுக்கரசியும் ஜனனி பயன்படுத்தும் ஒரு பொருளை எடுத்துவிட்டார்.
பூஜை நடக்கும் நேரத்தில் விசாலாட்சி தம்பி வருகிறார், அவர் திடீரென சாமியாடுகிறார். இந்த பூஜை நடக்க கூடாது, தவறான பூஜை, இது நடந்தால் உன் குடும்பத்திற்கே ஆபத்து என கூறுகிறார். அதைக்கேட்டதும் விசாலாட்சி, நந்தினி, ரேணுகா என அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
குணசேகரன் முழு பிளானை தெரிந்ததும் விசாலாட்சி செம கோபத்தில் திட்டுகிறார்.






