புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?… செம கூட்டணி

புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?… செம கூட்டணி


அல்லு அர்ஜுன்

புஷ்பா என்ற பிரம்மாண்ட, சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.

இவரது திரைப்பயணத்தில் இந்த படம் மிகவுமே ஸ்பெஷல், அதில் முக்கியமான ஒன்று இதுவரை தெலுங்கு சினிமாவில் எந்த நடிகரும் பெறாத சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் அல்லு அர்ஜுன்.

அதோடு இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் படமாக அமைந்தது, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யை வீழ்த்தி இப்போது டாப்பில் வந்துள்ளார்.

இப்படி புஷ்பா படத்தால் அல்லு அர்ஜுன் பெற்ற நிறைய விஷயங்கள் ஸ்பெஷல். கடந்த டிசம்பர் 5ம் தேதி படம் வெளியாகி ரூ. 1000 கோடியை நெருங்கி வருகிறது.

புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?... செம கூட்டணி | Allu Arjun Next Movie Mass Details


அடுத்த படம்

புஷ்பா 2 படம் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் அல்லு அர்ஜுனின் 2வது படம் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்களின் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளாராம்.

இப்பட புரொமோ ஜனவரியில் வெளியாக படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமா கண்டிராத ஒரு கதைக்களம் என தெரிவிக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *