புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் அன்ஷிதா… நாயகன் இவரா?

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் அன்ஷிதா… நாயகன் இவரா?

அன்ஷிதா

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்கள் முன் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் செல்லம்மா. சரியில்லாத கணவனிடம் இருந்து பிரிந்து தனது மகளை காப்பாற்றும் ஒரு தாயின் போராட்டமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

கடந்த 2022ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கடைசியில் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

726 எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் அன்ஷிதா.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் அன்ஷிதா... நாயகன் இவரா? | Bigg Boss Fame Anshitha Committed In New Serial

புதிய தொடர்

செல்லம்மா சீரியலுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார் அன்ஷிதா. பிக்பாஸ் முடித்ததும் அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாக பங்குபெற்று வந்த அன்ஷிதா சமீபத்தில் புதிய வீடு ஒன்று வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் அன்ஷிதா கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

அழகே அழகு என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளதாம். இதில் குணா, தர்ஷனா, அன்ஷிதா, பிரேம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *