பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்… வீடியோ இதோ

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்… வீடியோ இதோ

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பராசக்தி படம் வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படமும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்... வீடியோ இதோ | Sivakarthikeyan Birthday Celebration Video

பராசக்தி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் . கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

இவர் இயக்கிய தாய்க்கிழவி படம் வருகிற 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன்தான் தயாரித்துள்ளார். தாய்க்கிழவி படம் மிகப்பெரிய நம்பிக்கையை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துள்ளதால், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்... வீடியோ இதோ | Sivakarthikeyan Birthday Celebration Video

சேயோன் படத்தின் புரோமோ வீடியோ நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளிவந்தது. இந்த புரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்


இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் கொண்டாடிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் குட்டீஸுடன் அவர் நடனமாடிய வீடியோவும்படுவைரலாகியுள்ளது.

இதோ பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *