பிக்பாஸ் 9ல் என்ட்ரி கொடுக்கப்போகும் சின்னத்திரையின் ரியல் ஹிட் ஜோடி… அட இவங்களா…

பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ.
கடந்த அக்டோபர் 5ம் தேதி விஜய் டிவியில் இந்த ஷோ 20 போட்டியாளர்கள் பங்குபெற மாஸாக தொடங்கியது. முதல் வார முடிவில் இரண்டு பேர் வெளியேறிவிட்டார்கள், நந்தினி என்னால் இந்த நிகழ்ச்சியில் விளையாட முடியாது என கூறி அவரே வெளியேறிவிட்டார்.
பின் முதல் வார முடிவில் பிரவீன் காந்தி, விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இந்த பிக்பாஸ் 9 சீசன் ஒரே சண்டையாக தான் போய்க் கொண்டிருக்கிறது.
வைல்ட் கார்டு
தற்போது பிக்பாஸ் 9ல் என்ட்ரி கொடுக்கப்போகும் வைல்ட் கார்டு நபர்கள் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிஜ நட்சத்திர ஜோடி தான் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப்போகிறார்களாம்.
அவர்கள் வேறுயாரும் இல்லை பிரஜன் மற்றும் சான்ட்ரா தானாம், ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.