பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பெரிய மாற்றம்.. என்ன தெரியுமா?

பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 1220 எபிசோடுகளை கடந்துள்ளது. வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய அதிரடி திருப்பங்கள் ஏற்படுகிறது.
இன்றைய எபிசோட்
கதையில் இப்போது கோபியை ராதிகா விவாகரத்து செய்த கதைக்களம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில், எழிலின் படம் முடிந்த விழா நடைபெறுகிறது.
8 மாதங்களுக்கு பிறகான கதைக்களம் என 8 Months Leap கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது.






