பாக்கியலட்சுமிக்கு பதில் வரும் புது சீரியல்.. புது ப்ரோமோ வெளியானது இதோ

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பதிலாக என்ன புது சீரியல் வர போகிறது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
மகளே என் மருமகளே என்ற புது சீரியல் தான் 15 ஆகஸ்ட் முதல் வர போகிறது. ஆனால் அது மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்து இருக்கின்றனர்.
மகளே என் மருமகளே
மகன் இறந்துவிட்ட நிலையில் தனது மருமகளை சொந்த மகள் போல் எண்ணி பார்த்துக்கொள்கிறார் மாமியார்.
வீட்டு வேலைக்காரன் கொஞ்சம் எல்லைமீறி மருமகளுக்கு பொட்டு வைத்துவிட்டதை பார்த்து பளார் விடுகிறார் மாமியார்.
ப்ரோமோவை நீங்களே பாருங்க.