பல்லவன் அம்மா பற்றி நிலா சொன்ன விஷயம், ஆடிப்போன நடேசன்… அய்யனார் துணை புரொமோ

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் அட்டகாசமாக தொடங்கப்பட்ட ஒரு சீரியல் அய்யனார் துணை.
இளம் கலைஞர்களை சுற்றிய கதையாக அதிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர் அமைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் எல்லாம் நிலாவின் அப்பா சூழ்ச்சியால் சிக்கிய சோழனை காப்பாற்றும் கதைக்களம் அமைந்தது, பின் நிலாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வந்த சூப்பரான எபிசோடும் முடிந்தது.
சென்னை வந்த நிலா ஒரு புதிய கம்பெனியில் தேர்வாகி வேலைக்கு செல்ல இன்றைய எபிசோடில் கிளம்புகிறார்.
புரொமோ
அவர் முதல் நாள் வேலைக்கு செல்வதால் சேரன் இனிப்பு செய்துகொடுத்து அசத்துகிறார், பாண்டியன் வாழ்த்து கூறுகிறார்.
பல்லவன் தனது பேவரெட் பேனாவை கொடுக்கிறார். அதோடு வெடி எல்லாம் வெடித்து நிலாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.
சோழன், நிலாவிற்கு வாட்ச் வாங்கி கொடுத்து அசத்துகிறார். பின் நாளைய எபிசோட் புரொமோவில், நிலா பல்லவன் அம்மா பற்றி நடேசனிடம் கேட்கிறார், அவர் வழக்கம் போல் கோபப்படுகிறார்.
நிலா நான் இன்று அவரை பார்த்தேன் என கூற நடேசன் ஷாக் ஆகிறார். இதனால் நிலா பல்லவன் அம்மா யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக தெரிகிறது.