பராசத்தி படத்தின் முன்பதிவு வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா இணைந்து நடித்துள்ள படம் பராசக்தி.
இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாக படக்குழு கூறுகிறது.
ஆனால், இது ஆர்கனிக்காக வந்த வியூவ்ஸ் இல்லை, பாட்ஸ் வைத்து வரவைத்துள்ள வியூவ்ஸ் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
முன்பதிவு
இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, பராசக்தி படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் உலகளவில் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது.






