பப்ஜியால் உருவான காதல்.., சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கர்ப்பம்

பப்ஜியால் உருவான காதல்.., சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கர்ப்பம்

காதலனை பார்க்க 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ள செய்தி பரவி வருகிறது.



கர்ப்பமான பாகிஸ்தான் பெண்



பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனா மீது காதல் வந்துள்ளது.

இவர் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார். பின்பு, சீமா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்து மதத்திற்கு மாறிய பிறகு, சீமா ஹைதர் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சச்சின் மீனாவை மணந்தார்.

பப்ஜியால் உருவான காதல்.., சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கர்ப்பம் | Pregnancy Of Pakistani Woman Entered India Illegal

அவர்கள் இந்தியாவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரது எட்டு வயது மகன் ஃபர்ஹான் அலி, ராஜ் என்று பெயர் மாற்றப்பட்டார்.

அவரது மூன்று மகள்கள், ஃபர்வா (6), ஃபரிஹா படூல் (4), மற்றும் ஃபர்ஹா ஆகியோரின் பெயர்கள் முறையே பிரியங்கா, முன்னி மற்றும் பாரி என்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஹைதரின் முதல் கணவர் குலாம் ஹைதர் பாகிஸ்தானில் இருக்கிறார்.



இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் சச்சின் மீனா மற்றும் அவரது நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் சீமா
ஹைதர் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.



இந்த வீடியோவில் அவருக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற உணர்வுகள் ஏற்படுவதாக தெரிகிறது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு விமர்சனங்கள் வருகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *