பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய நடிகை டிம்பிள் ஹயாதி.. போலீசில் அதிர்ச்சி புகார்

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய நடிகை டிம்பிள் ஹயாதி.. போலீசில் அதிர்ச்சி புகார்

தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் டிம்பிள் ஹயாத்தி. அவர் மீது அவரது பணிப்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத்தில் ஷேக்பெட் என்னும் இடத்தில் இருக்கும் Westwood Apartmentல் டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் பிரியங்கா பீபர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை நடிகை மோசமாக நடத்தினார், உணவு கூட சரியாக தரவில்லை என அந்த பெண் தற்போது போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய நடிகை டிம்பிள் ஹயாதி.. போலீசில் அதிர்ச்சி புகார் | Dimple Hayathi Face Fir For Abusing Domestic Help

மோசமாக நடத்தினார்

நடிகை டிம்பிள் ஹயாத்தி தன்னை மோசமாக பேசினார். “உன் வாழ்க்கை என் செருப்புக்கு கூட ஈடாக இருக்காது” என பேசினார் எனவும் கூறி இருக்கிறார்.

செப்டம்பர் 29ம் தேதி தான் பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. வீட்டின் நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவர் கணவர் டேவிட் இருவரும் படுமோசமாக இன்சல்ட் செய்யும் வகையில் திட்டினார்களாம்.

சண்டையில் தனது உடை கிழிக்கப்பட்டது எனவும் பணிப்பெண் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.


நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நடிகைக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என தெரிகிறது.
 

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய நடிகை டிம்பிள் ஹயாதி.. போலீசில் அதிர்ச்சி புகார் | Dimple Hayathi Face Fir For Abusing Domestic Help

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *