நையாண்டியுடன் மக்கள் விஷயங்கள் பற்றிய பேசிய படங்கள்…

தமிழ் சினிமாவில் எந்த வகையான படங்கள் வேண்டும் சொல்லுங்கள், எல்லா Journalலயும் இங்கே படங்கள் உள்ளது.
சமீபகாலமாக வழக்கமான காதல், குடும்பம்,, ஆக்ஷன் போன்ற கதைக்களத்தை கொண்ட படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்கள் வருகின்றன, மக்களும் கொண்டாடுகிறார்கள்.
சரி நாம் இப்போது நக்கல், நையாண்டியுடன் அரசியல் பேசிய படங்களை பற்றிய காண்போம்.
தேசிய கீதம்
சேரன் இயக்கத்தில் முரளி, ரம்பா, விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் தேசிய கீதம்.
இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தை தரம் சந்த் லுங்கீட் என்பவர் தயாரித்திருந்தார். 1998ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி ஒரு தொலைதூர கிராமத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியது.
தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பை சரிசெய்ய புரட்சிகர வழிகளைத் தேடும் கிராமவாசி வேடத்தில் முரளி நடித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே கதையின் அடிப்படை ஆகும்.
புதுமை பித்தன்
1998ம் ஆண்டு எஸ்.கே.ஜீவா இயக்கத்தில் பார்த்திபன், ரோஜா, தேவயானி, பிரியா ராமன், ரஞ்சித், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பிவ் வெளியான திரைப்படம் புதுமை பித்தன்.
ஒரு ஊழல் அரசியல்வாதியின் பகைமையால் ஜீவா என்பவரின் குடும்பம் கொலை செய்யப்படுகிறார்கள். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்.
அந்த காப்பகத்தில் இருந்து தப்பித்த ஜீவா தனது வாழ்க்கையை அழித்த அரசியல்வாதியை பழிவாங்குகிறார்.
பாலைவன ரோஜாக்கள்
1986ம் ஆண்டு எம்.கருணாநிதி கதை எழுத மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், லட்சுமி, நளினி ஆகியோர் நடித்த திரைப்படம்.
வணிக ரீதியாக வெற்றிப் பெற்ற இப்படம், ஒரு பத்திரிக்கையாளர், அவரது காதலர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நேர்மையற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த ஒரு ஊழல் அமைப்பை எதிர்த்துப் போராடுவதை மையமாக கொண்ட திரைப்படம்.
வீரப்பதக்கம்
சத்யராஜ்-மணிவண்ணன் கூட்டணியில் வெளியான ஒரு திரைப்படம் வீரப்பதக்கம்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளியானது.
ஒரு காவலர், காவல் துறையில் மிக உயர்ந்த பதவியை அடைய ஊழல் வழிகளைப் பயன்படுத்துகிறார். தனது ஊழல் நடவடிக்கைகளால் வாழ்க்கையை அழித்துவிட்ட ஒரு உறவினரைச் சந்தித்த பிறகு அவர் மாறுகிறார், இதுவே படத்தின் கதை.
அமைதிப்படை
மணிவண்ணன்-சத்யராஜ் கூட்டணியில் வெளியான ஒரு தரமான திரைப்படம். தமிழ் சினிமா இருக்கும் வரை எம்.எல்.ஏ. நாகராஜ சோழனை யாரும் மறக்கவே மாட்டார்கள்.
படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை அரசியல் நையாண்டி வசனங்கள், காட்சிகள் என படமே அட்டகாசமாக இருக்கும்.
அரசியல்வாதியின் நெருக்கமான வாழ்க்கையை மிக நெருக்கமாக காட்ட முயற்சித்த படங்களில் இப்படம் மற்ற எல்லா படங்களுக்கும் மாஸ்டர் கிளாஸ்.
இப்படங்களை தாண்டி தாய்மாமன், இம்சை அரசன், முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களும் இந்த லிஸ்டில் இடம்பெறும்.