நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றினாலும் எப்போதும் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக பேசியது இல்லை.
சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. திருமணத்தை அடுத்த வருடம் பிப்ரவரியில் நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.
ராஷ்மிகா பதில்
இந்நிலையில் ராஷ்மிகா தனது அடுத்த படமான தம்மா படத்தில் ப்ரோமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் வாழ்த்துக்கள் கூற, அதற்கு அவர் குழப்பம் ஆனார்.
ராஷ்மிகா புதிதாக தொடங்கி இருக்கும் perfume தொழிலுக்காக தான் வாழ்த்து கூறுவதாக தொகுப்பாளர் விளக்கம் சொன்னார். ‘வேறு எதாவது காரணம் இருக்கிறதா’ என தொகுப்பாளர் கேட்க, ‘இல்லை இல்லை’ என கூறிய ராஷ்மிகா, ‘நிறைய இருக்கிறது, ஏனென்றால் பல விஷயங்கள் நடக்கிறது. உங்கள் வாழ்த்துக்களை அவை அனைத்துக்கும் என எடுத்துக்கொள்கிறேன்’ என கூறுகிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்ததை ராஷ்மிகா மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.