நரிவேட்டை திரை விமர்சனம்

நரிவேட்டை திரை விமர்சனம்

மலையாள சினிமாவில் தொட்ர்ந்து காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் வந்துக்கொண்டே உள்ளது, இதில் டொவினோ தாமஸே அரை டஜன் படங்கள் செய்திருப்பார், அப்படி டொவினோ நடிப்பில் மேலும் ஒரு காவல்துறை சம்மந்தப்பட்ட படமாம நரிவேட்டை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்தில் காட்டில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடம் தேவைகாக சிறு சிறு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம் படத்தின் நாயகன் டொவினோ கையில் ஒரு பைய்யுடன் தலைமறைவாக இருக்க, அவரை போலிஸ் தேடுகிறது.

படம் அங்கிருந்து ப்ளாஸ்பேக்-ஆக செல்ல, டொவினி சென்றால் கவர்மெண்டில் உயர் அதிகாரி வேலை தான் என்று இருக்கிறார். அப்போது வேலையே இல்லாத காரணத்தை காட்டி காதலி உட்பட எல்லோரும் திட்ட, கிடைத்த கான்ஸிடபுள் வேலைக்கு செல்கிறார்.

புடிக்காத வேலை என்றாலும் யுனிபார்ம் போட்ட தைரியத்தில் ஒருவரை டொவினோ தாக்க, அவரை பெரிய போலிஸ் அதிகாரியே கண்டிக்கின்றனர்.

இந்த நிலையில் டொவினோவுடன் சேர்த்து பல போலிஸார்கள் படத்தின் ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் சிறு போராட்டம் நடத்தினார்களே அவர்கள் பெரிய போராட்டமாக நடத்த திட்டமிடுகின்றனர்.

அந்த இடத்திற்கு சென்ற டொவினோ வாழ்க்கையே மாற்றும் பல சம்பவங்கள் நடக்க, இவரை ஏன் இப்போது போலிஸ் தேடுகிறது அந்த ஊரில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.  

படத்தை பற்றிய அலசல்

டொவினோ போலிஸ் கதாபாத்திரம் என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஆனால், இதில் ஒரு கான்ஸிடபுள் ஆக எந்த அதிகாரமும் இல்லாமல் புடிக்காத வேலையை அவர் செய்ய, கடைசியில் அது அவரை எந்த அளவிற்கு செல்வது என்பதை தன் முகத்தில் அவர் காட்டிய விதம் டொவினோ திரை பயணத்தில் இந்த வர்கீஸ் கதாபாத்திரம் ஒரு மறக்க முடியாத ரோல் தான்.

ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் போராட்டத்தின் போது ஏம்பா இந்த வேலிய உடைச்சிங்க, போட்டு கொடுங்க என எண்ட்ரி ஆகி, அடுத்தடுத்து பல நாச வேலைக்கு மிக முக்கிய புள்ளியாக விளங்கும் சேரன் நெகட்டிவ் சைட் நடிப்பு ரசிகர்களுக்கு கடுக் அதிர்டச்சி தான்.

அரசாங்கம் சொல்வதை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரி, இங்க பாசம், நேசம், எமோஷ்னல் என எதற்கும் இடைமில்லை என போலிஸ்காரர்கள் மற்றும் இந்த சிஸ்டத்தின் கொடூரத்தை தோல் உரித்து காட்டியுள்ளது கிளைமேக்ஸ்.

அதே நேரத்தில் நீதித்துறை ஒன்று உள்ளது, அவர்களிடமிருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது, அதற்கு ஒருவர் மனம் திறந்தினாலே போதும், என டொவினோ கொடுக்கும் வாக்குமூலம் ஒரு அரசாங்கத்திற்கே அச்சம் வர வைக்கும் என்பதையும் இயக்குனர் காட்டிய விதம் சிறப்பு.

பல போராட்டங்கள் கலவரங்களாக எப்படி மாறுகிறது.

கடைசியில் அரசாங்கம் அதை தங்ககுக்கு சாதகமாக எப்படி மாற்றுகிறது என்பதை பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் காட்டியுள்ளனர்.

எந்த துறை என்றாலும் நல்லவர்களும் இருப்பார்கள் என்பது போல் ட்வின் வழிகாட்டும் சூரஜ் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

எந்த காலகட்டத்திலும் இந்த துப்பாக்கியை மட்டும் பயன்படுத்த கூடாது போன்ற வசனம் கவனிக்க வைக்கிறது.

அதே நேரத்தில் படம் மிக மெதுவாக நகர்ந்து செல்வது சிலருக்கு பொறுமையை சோதிக்கலாம், ஒளிப்பதிவு, இசை, என டெக்னிக்கல் டீம் ஒர்க் நன்று. 

க்ளாப்ஸ்

டுவினோ, சேரன், சூரஜ் நடிப்பு.

கதைக்களம், அதை தைரியமாக சொன்ன கருத்துக்கள்.

டெக்னிக்கல் டீம்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சிகள், அதிலும் காதல் காட்சிகள் தேவையா என்பது போல் உள்ளது.

மொத்தத்தில் நரிவேட்டை மலையாள சினிமாவில் வந்த மற்றொரு மிக முக்கியமான படம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *