நடிகை ராதிகா சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி

80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். தற்போது தமிழ் சினிமாவில் அவர் குணச்சித்திர வேடங்கள், அம்மா ரோல் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
மேலும் சீரியல்களிலும் அவர் கடந்த பல வருடங்களாக நடத்து வருகிறார். சொந்த நிறுவனம் மூலமாக சீரியல்களை தயாரிக்கவும் செய்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
நடிகை ராதிகா சரத்குமார் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதற்காக சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆகியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.