நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக வதந்தி.. கடும் கோபமாக பதிவிட்ட நடிகர்

நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக வதந்தி.. கடும் கோபமாக பதிவிட்ட நடிகர்

நடிகர்கள் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அப்படி ஒரு வதந்தி பரவுவதும், அது பொய் தகவல் என நடிகர்கள் விளக்கம் கொடுப்பதும் அடிக்கடி நடக்கிறது.

அப்படி பிரபல நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக youtubeல் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதற்கு கடும் கோபமாக பார்த்திபன் பதிலடி கொடுத்து இருக்கிறார். “கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா” என அவர் அந்த நபரை திட்டி இருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக வதந்தி.. கடும் கோபமாக பதிவிட்ட நடிகர் | R Parthiban Angry Post On Death Rumour

கோபமான பதிவு

“இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்.”

“இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்.”

இவ்வாறு பார்த்திபன் கோபமாக கூறியுள்ளார்.
 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *