நடிகர் தனுஷ் சென்சேஷன் நடிகையுடன் காதல்? பரபரப்பில் பாலிவுட்

நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது.
தற்போது தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.
மிருனாள் தாகூர்
இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. சீதா ராமம் பட புகழ் நடிகை உடன் தனுஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
”அவர்கள் டேட்டிங் செய்வது உண்மைதான், தற்போது புதுசு என்பதால் low key ஆக யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்” என நெருக்கமான ஒருவர் சொன்னதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் இந்த காதல் செய்தி பற்றி தனுஷ் அல்லது மிருனாள் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.