தென்னிந்திய நடிகர் அப்படி நடந்துகொண்டார்.. மோசமான அனுபவம் குறித்து தமன்னா

தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
மோசமான அனுபவம்
இந்நிலையில், நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் அவருக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ” நான் சினிமாவில் நடிக்க தொடங்கியபோது தென்னிந்திய படம் ஒன்றில் கமிட்டானேன். அப்போது நடிகர் ஒருவர் எனக்கு தொந்தரவு கொடுத்தார்.
அவரது நடத்தை எனக்கு சங்கடத்தை கொடுத்தது. இது போன்று நடந்து கொண்டால் இனி நடிக்கமாட்டேன் என சொன்ன பின் அந்த நடிகர் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.