துரந்தர் வசூலில் மிகப்பெரிய சாதனை! 21 நாளில் இத்தனை கோடியா

ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ஆரம்பம் முதலே நல்ல வசூலை குவித்து வருகிறது இந்த படம்.
பல இஸ்லாமிய நாடுகளில் இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் துரந்தர் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
1000 கோடி
இந்நிலையில் ரூ.1,000 கோடி என்ற பிரம்மாண்ட வசூல் மைல்கல்லை துரந்தர் படம் கடந்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 668.80 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது.
இந்த சாதனையை செய்த 9வது இந்திய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
21 நாட்களில் இந்த சாதனையை துரந்தர் படம் செய்து இருக்கிறது.






