திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்.. நடிகை கஜோல் கூறிய கருத்து

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்.. நடிகை கஜோல் கூறிய கருத்து

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். இவர் நடிகை ட்விங்கிள் கன்னாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிதான் ‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’.

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்.. நடிகை கஜோல் கூறிய கருத்து | Kajol Says Marriage Will Have Expiry Date

கஜோல் கருத்து

பாலிவுட்டில் எப்போதும் ஏதாவது சூடான விவாதம் நடந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ளும் டாக் ஷோக்களில் அவர்கள் கூறும் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அப்படி, ‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’ நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கூறிய கருத்து இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், திருமணத்திற்கு காலாவதி மற்றும் புதுப்பித்தல் தேதி வேண்டும் என்று நடிகை கஜோல் கூறினார்.

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்.. நடிகை கஜோல் கூறிய கருத்து | Kajol Says Marriage Will Have Expiry Date

நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம்

அந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக பங்கேற்ற நடிகர் விக்கி கௌஷல் மற்றும் க்ரித்தி சனோன் கலந்துகொண்டனர். “திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டுமா? என நடிகை ட்விங்கிள் கேட்டார். அதற்கு விக்கி, க்ரித்தி மற்றும் ட்விங்கிள் ஆகிய மூவரும் ‘இல்லை’ என கூறினார்கள்.

ஆனால், நடிகை கஜோல் ‘ஆம்’ என்றார். இது திருமணம் வாஷிங் மெஷின் இல்லை’ என அதன்பின் நடிகை ட்விங்கிள் கூறினார்.

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்.. நடிகை கஜோல் கூறிய கருத்து | Kajol Says Marriage Will Have Expiry Date

ஆனால், நடிகை கஜோல் தனது கருத்தை ஆதரித்து பேசினார், “சரியான நேரத்தில் நேரத்தில் சரியானவரை மணப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? புதுப்பித்தல் விருப்பம் இருந்தால் நல்லது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம்” என கூறினார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *