திமுக கொடுத்த சீட் ஏற்புடையதாக இல்லை.. போட்டி இல்லை என கமல் ஹாசன் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அவர் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கமலின் கட்சிக்கு திமுக மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் தொகுதிகள் வழங்க முன்வந்ததாக கூறப்படும் நிலையில் அது பற்றி கமல் காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
போட்டியில்லை
“நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை.”
“ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என்கிற முடிவை அறிவிக்கிறோம்.”
இவ்வாறு கமல் அறிவித்து இருக்கிறார்.






