திடீர் இமயமலை சென்ற ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ!

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், நித்யா ராம், ஸ்ருதிஹாசன், சார்லி, லொள்ளு சபா மாறன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இதனிடையே ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், ரஜினி இமயமலைக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கமான ஒன்று. இந்த முறை கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததன் காரணமாக செல்லவில்லை.
வைரலாகும் போட்டோ!
இந்நிலையில், தற்போது ஒரு வார பயணமாக இமயமலை சென்றுள்ளார். ரஜினிகாந்த் இன்று காலை நான்கு மணிக்கு புறப்பட்டு உள்ளார்.
இன்று ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் ரஜினிகாந்த் நாளை பத்ரிநாத் செல்கிறார். அதைத்தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார். ஒரு வாரம் ரஜினிகாந்த் அங்கு இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.