தர்ஷனால் பார்கவிக்கு பிரச்சனையா, கோபத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. முதல் பாகத்தை விட 2ம் பாகம் தரமான கதையுடன் ஒளிபரப்பாகிறது என்று தான் கூற வேண்டும்.
கடந்த வாரங்களில் தர்ஷன் திருமணம் யாருடன் நடக்கும் என்ற பரபரப்பு தான் இருந்தது. இதனால் ஜனனிக்கு, குணசேகரன், அறிவுக்கரசி என இருவரும் வெவ்வேறு முறையில் பிரச்சனைகளை கொண்டு வந்தார்கள்.
கதிர் இன்னொரு பக்கம் ஈஸ்வரியை கொலை செய்ய எல்லாம் பிளான் போட்டார். ஆனால் எதிரியின் சூழ்சிகள் அனைத்தையும் தாண்டி ஜனனி தர்ஷன்-பார்கவி திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார்.
வீட்டிற்கு வந்தவர்களை கதிர்-ஞானம் வெளியே அனுப்ப பிளான் போட குணசேகரன் லாக் ஆகியுள்ளதால் ஜனனி மற்றும் அனைவரையும் அவரே வீட்டிற்குள் போக சொல்லிவிட்டார்.
புரொமோ
வீட்டிற்கு வந்த நாள் முதல் கதிர்-ஞானம் மற்றும் அவரது அம்மா வழக்கம் போல் ஏதேதோ பேசுவதும், சண்டை போடுவதுமாக உள்ளனர்.
இன்றைய எபிசோட் புரொமோவில், கெவின் நண்பரை சந்தித்து ஜனனி மற்றும் சக்தி வீடியோ கேட்கிறார்கள். பின் வீட்டில் ஏதோ பிரச்சனை நடந்ததாக தெரிகிறது. ஜனனி தர்ஷனை பார்த்து இதுவரை உனது குணத்தால் உன் அம்மா பாதிக்கப்பட்டார் இப்போது பார்கவி என்கிறார்.
இதோ புரொமோ,